(UTV | கொழும்பு) –
உலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பலான ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. குறித்த கப்பல் புளோரிடாவின் மியாமியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், கரீபியன் தீவுகளை 7 நாட்களுக்கு சுற்றி தனது முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோயல் கரீபியன் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் 365 மீட்டர் நீளமும், 20 தளங்களும் கொண்டதாகவும், அதிகபட்சமாக 7,600 பயணிகள் இதில் பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியதான இந்த கப்பலில் 07 நீச்சல் தடாகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த கப்பலின் மூலம் தீங்கு விளைவிக்கும் மீத்தேன் வாயு வெளியேறும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්