(UTV | கொழும்பு) –
பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காலி – ரத்கம பகுதியில் வைத்து 30 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை, சம்பவத்தின் பின்னர் எடுத்துச் சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், கொலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இதுவரையில் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්