A/L பரீட்சை இன்று ஆரம்பம்- 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை  இந்த பரீட்சை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர், அவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள். தனியார் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 65,531 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2302 பரீட்சை நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை…

Read More

அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

(UTV | கொழும்பு) – நடப்பாண்டின் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்குச் செல்ல முடியாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, பல்வேறு மாகாணங்களில் மழை, வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்குத் செல்ல முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுகின்றனர்.   இந்த விடுமுறையை பெற்றுக் கொள்வதற்காக…

Read More

வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்கள்!

(UTV | கொழும்பு) – கல்வி சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, உணவு, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு VAT வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே. கே. ஐ. எரந்த தெரிவித்துள்ளார். மேலும், நெத்தலி, பெரிய வெங்காயம், கருவாடு போன்ற சிறப்பு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ள 65 வகையான பொருட்களுக்கு VATவரி தாக்கம் செலுத்தாது எனவும் அவர்…

Read More

கிரிக்கெட் மீதான இந்தியாவின் சதியை வெளியிடுவேன் – அர்ஜுன ரணதுங்க எச்சரிகை.

(UTV | கொழும்பு) – இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரணதுங்கவின் இந்த கருத்து, பலத்த எதிர்பார்ப்பை கிரிக்கெட் சமூகத்திற்குள் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இந்திய கிரிக்கட்…

Read More

மின் கட்டணத்தை குறைக்க தீர்மானம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) – மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சேர்பெறுமதி (வற் )வரி மின்கட்டணத்துக்கு தாக்கம் செலுத்தாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்தார். மின்கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, மின்கட்டண திருத்தம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நீர்மின்னுற்பத்தி,நிலக்கரி மற்றும் எரிவாயுவுடனான மின்னுற்பத்தி மற்றும் அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம் கோரியுள்ளோம்.எதிர்வரும்…

Read More

அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது – மகிந்த மகிழ்ச்சி.

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிரிந்திவெல பிரதேசத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். “இந்த அரசாங்கம் மிகச் சிறந்த வேலையை செய்கிறது என்று நான் நினைக்கிறேன். போதைப்பொருளால் இந்த நாடு அழிகிறது. இளம் தலைமுறை மறைந்து வருகிறது. எனவே, சோதனை நடத்தி…

Read More

யாழ் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

(UTV | கொழும்பு) –  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக…

Read More

டிரானின் கருத்துக்கு எதிர்ப்பு – மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

(UTV | கொழும்பு) – சட்டத்தரணிகள் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த கருத்துத் தொடர்பில் அதிருப்தியடைவதாக கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று முன்தினம் கடிதமொன்றை அனுப்பிவைத்தே அவர்கள் இவ்வாறு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அக் கடிதத்தில் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள் ளதாவது, அவ்வாறான குற்றவாளிகள் சார்பில் ஆஜராகுவதற்கும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் கருத்து முன்வைப்பதற்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கான உரிமை சட்டத்தரணிகளுக்கு இருக்கிறது. ஊழல்வாதிகள் சார்பில்…

Read More

ஜனாதிபதியை சந்திக்க மறுத்த – சி.வி.விக்கினேஸ்வரன்

(UTV | கொழும்பு) – ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட…

Read More

மஹர முஸ்லிம் பள்ளிவாயலுக்கு விரைந்த ரிஷாட் பதியுதீன்!

(UTV | கொழும்பு) – மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீளத்திறக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்தும் இதனை மூடிவைத்திருப்பது உகந்ததல்ல எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு இன்று நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூரியதாவது, “மஹர பிரதேசத்தில்…

Read More