சீனாவின் நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட மறுப்பு?

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நங்கூரமிடச் செய்வதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி இலங்கையில் ஒரு மாத காலத்துக்கு தமது நீர்மூழ்கி கப்பலை நங்கூரமிடச் செய்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. ஆனால் இதற்கான கோரிக்கையை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஒக்டோர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில்…

Read More

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் இலங்கையில் முதலீடு செய்தல் குறித்து சாதகமான வாய்ப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் இலங்கையில் முதலீடு செய்தல் குறித்து சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்ச ரவி கருணாநாயக்க தெரிவத்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இளையுதிர்கால கூட்டத்திற்காக வொஷிங்டன் சென்றுள்ள நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளன உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு, விவசாய பொருட் பதனிடல், சுகாதார, ஏற்றுமதிக்கான பொருளுற்பத்தி…

Read More

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் “பாட்டா” உச்சிமாநாடு

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டிற்கான ஆசிய – பசுபிக் பயண சங்கத்தின் ‘பாட்டா’ என்று அழைக்கப்படும் சுற்றுலாத்துறை உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நீர்கொழும்பில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ” எதிர்கால சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் இடர், தடை மற்றும் கண்டுபிடிப்பு ” என்பது இந்த வருட மாநாட்டின் தொனிப்பொருளாகும். இந்த மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து,…

Read More

இலங்கையில் மன்செஸ்ட்டர் கால்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தை அமைக்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் காற்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மென்செஸ்ட்டர் என்ற பெயரிலான பயிற்சிக் கூடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இடம்பெறவுள்ளது. காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடகப் பணிப்பாளர் ரஞ்சித் ரொட்ரிகோ நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து தெரிவிக்கையில்: இந்த அக்கடமியில் ஆரம்பக்கட்டமாக 200 பிள்ளைகள் இணைய முன்வந்துள்ளார்கள். தேசிய அணிக்காக விளையாடிய சிரேஷ்ட வீரர்கள் காற்பந்தாட்டப் பயிற்சிக் கூடத்தை நிர்வகிப்பார்கள் என்று மேலும் கூறினார்.

Read More

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி உதவியை தென்கொரிய அரசாங்கம் வழங்கவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சிக்கும், தென்கொரியாவின் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த நிதி உதவிக்கான அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு கடற்றொழில் தொழில்நுட்பக் கல்லூரிகளை இலங்கையில் நிறுவவும் தென்கொரியா இணக்கம் வெளியிட்டுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் இந்த கடற்றொழில் தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…

Read More

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் விருப்பத்துடன்

 (UDHAYAM, COLOMBO) – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகுனுமா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பரஷ்பர உறவு குறித்த இடம்பெற்ற மாநாடு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டை இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்தது. இலங்கையுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளையும் மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Read More

இலங்கையில் நடைபெறும் பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நடைபெறவுள்ள பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் லீயூ சியான் தெரிவித்துள்ளார். இலங்கை – சீன ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள  பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் அவர் உரையாற்றினார். இந்த வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று ஆரம்பமானது. இது 12 ஆம் திகதி வரை வரை நடைபெறவுள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தி, இலங்கையின் பொருளாதார கலாசார அபிவிருத்திக்கும்…

Read More