பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் நிவாரண உதவி

(UDHAYAM, COLOMBO) – ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் நேற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. இடர்முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் கெனியி சுகனுமா மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாhப்பா , வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கூடாரத்திற்கான உபகரணங்கள் , படுக்கை விரிப்புக்கள் , நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் , மின்பிறப்பாக்கி, மெத்தை மற்றும் நீர்த்தாங்கிகள் உள்ளடங்கியுள்ளன.

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட வைத்திய சேவையை வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவையை வழங்க இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் இணைப்பாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார நிலைமைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் முதல்கட்டமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“எனது ஜூன் மாத சம்பளம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக” – அமைச்சர் டிலான் பெரேரா

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அனர்த்தத்திற்குள்ளாகியிருக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2017ம் ஆண்டு ஜூன் மாத சம்பளத்தை தான் நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த பணத்தை தாம் பின்வரும் கணக்கில் வைப்பீடு செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளார். கணக்கின்பெயர்                          : செயலாளர் , இடர்முகாமைத்துவ அமைச்சு, இடர் நிவாரண கணக்கு வங்கியின் பெயர் மற்றும் கிளை  : இலங்கை வங்கி / ரொறிங்டன் கிளை கணக்கு இலக்கம்                         :…

Read More

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட வைத்தியக்குழு

(UDHAYAM, COLOMBO) – பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார நிலைமையை பரிசோதிப்பதற்காக பல விசேட வைத்தியக்குழுக்களை சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சு அனுப்பிவைத்துள்ளது. அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் இதுவரையில் எந்தவித தொற்றுநோய் தொடர்பான தகவலும் இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இவ்வாறான ஒரு நிலை ஏற்படாத வகையில் சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நன்கொடை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு 15 மில்லியன் யுவான்கள் பெறுமதியான நிவாரண பொருட்களை நன்கொடையாக சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தேவையான கூடாரங்கள், படுக்கை விரிப்புக்கள் போன்றவை இதில் அடங்கியுள்ளன. இந்த பொருட்களை விரைவாக இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானொலியான சீஐஆர் இன்று தெரிவித்துள்ளது.

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் அனுதாபம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் அனுதாபம் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டுள்ளர். [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/modi_twitter.png”] முதலாவது கப்பல் நேற்று (26) காலையும் இரண்டாவது கப்பல் இன்று இந்தியாவிலிருந்து புறப்படும் என்றும் இந்தியப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளார். இலங்கை…

Read More

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு

(UDHAYAM, COLOMBO) – வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு தேவையான குடிநீர் விநியோகத்துக்காக இந்திய அரசாங்கத்தினால் தண்ணீர் பௌசர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்தினால் 08 தண்ணீர் பௌசர்கள் குறித்த தண்ணீர் பௌசர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டன. 16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சி காரணமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக…

Read More