அனர்த்தத்தினால் மெய்வல்லுனர் வீரர்கள் பலர் பாதிப்பு
(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீர வீராங்கனைகள் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பான அறிக்;கை ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர கோரியுள்ளார். இதற்கு அமைவாக இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இலங்கைக்கு சர்வதேச வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மெய்வல்லுனர் வீரர்கள் பலர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி தெலவத்த முத்துவ என்ற இடத்தில் பயிற்சிபெற்ற மெய்வல்லுனர் வீரர் மற்றும் வீராங்கனைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.