இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. இதனுடன் 104 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 88 பேர் காயமடைந்துள்ளனர். இயற்கை அனர்த்தங்களால் 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சீரற்ற காலநிலையால் 412 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 266 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன்,…

Read More

கல்விச் சான்றிதழ்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்காக பரீட்சைகள் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சும் வழங்கும் பரீட்சை சான்றிதழ்களுக்கு அப்பால், அந்த சான்றிதழ்களின் பிரதிகளை உரிய நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இலங்கையின் கல்விச் சான்றிதழ்களுக்கு சர்வதேச மட்டத்தில் உள்ள அங்கீகாரத்தை மென்மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.. இதற்குரிய வேலைத் திட்டத்தை இலங்கை பரீட்சைகள் திணைக்களமும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் கூட்டாக அமுலாக்கின்றன. வெளிநாடு செல்வோர் போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து மோசடிகளில்…

Read More

வௌ்ளவத்தை கட்டிட சரிவு : இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி தீவிரம்!

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் இடம்பெற்ற கட்டிட இடுபாடுகளுக்களுக்குள் சிக்கி காயமடைந்த நிலையில், சிகிச்சைபெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை சாலிமன் வீதியிலுள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்று நேற்று சரிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்நதனர். அவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையிலும் ஏனையவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கியிருந்த இரண்டு பேர் நேற்று மாலை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, கட்டிட…

Read More

மோடியின் வருகை காரணமாக இருநாட்டு உறவு மேலும் வலுப்பெறும் -மனோ

(UDHAYAM, COLOMBO) – சுதந்திர கட்சியின் அமைச்சரொருவர் இணை அமைச்சரவை பேச்சாளராக செயற்படுவது தொடர்பில் பிரச்சினை இல்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர ்இதனை தெரிவித்தார். மேலும் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு  சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் , இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர ்தெரிவித்திருந்தார்.

Read More

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: மேலும் இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – வெலிபன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர், கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை இனங்கண்டு அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிபன்ன காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Read More

கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது

(UDHAYAM, COLOMBO) – ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவலுக்கு அமையவே இந்த 34 வயதான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இவர் இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஊடகவியலாள் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இராணுவ மேஜர்…

Read More

மாணவர் ஒருவரை தாக்கிய மேலும் 6 மாணவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – அநுராதபுரம் பிரதேசத்தில் முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களை நேற்று இரவு காவற்துறை கைது செய்துள்ளது. அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு பாடசாலையின் மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் நிலையில், காதல் தொடர்பில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை சம்பந்தமான தகவல் வெளியாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Read More

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் அரிசி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சதொச ஊடாக பாதுகாப்பு தொகையாக பராமரிப்பதற்கு இந்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Read More