சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மேலும் பத்து கோடி 72 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு மேலும் பத்து கோடி 72 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் அளித்துள்ளது. மூன்று ஆண்டுத் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார வேலைத்திட்டங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பதில் தலைவர் மிட்ஷூ ஹிரோ ஃபுரூஸாவா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பான இரண்டாவது மீளாய்வை பூர்த்தி செய்துள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு பத்து கோடி 72…

Read More

இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை

(UDHAYAM, COLOMBO) – எதிர்காலத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை இருப்பதாக, ஒக்ஸ்போர்ட் வர்த்தக குழுமம் எதிர்வு கூறியுள்ளது. கடந்த மே மாதம் இலங்கைக்கான ஜு.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தது. இதன்படி 6000 இலங்கை உற்பத்திகளுக்கான வரிவிதிப்பு நீக்கப்பட்டு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் 4பில்லியன் யூரோக்களாக பதிவாகி இருந்தது. இதில் இலங்கையின் ஏற்றுமதி 2.6 பில்லியன் யூரோக்களாகும். இந்த ஏற்றுமதியானது…

Read More

தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் குறித்து தகவல்கள் இல்லை – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – சவுதிஅரேபியாவிற்கு தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் தொடர்பாக தகவல் எதுவும் இல்லையென்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களது உறவினர்கள் இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறையிட்டுள்ளனர். சவுதிஅரேபியாவிற்கு தொழிலுக்காக புறப்பட்டுசென்றோர் தொடர்பான தகவல்கள் தெரியுமாயின் அதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 009411 4379328 என்ற தொலைபேசியின் ஊடாக அறிவிக்குமாறு வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு  அறியத்தரவும். எஸ்.பி. சுவிர்தா ராணி [ot-caption…

Read More

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

(UDHAYAM, COLOMBO) – சவுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள், இந்த மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

கட்டாருக்கு மேலும் கால அவகாசம்

(UDHAYAM, COLOMBO) – கட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கட்டார் நாட்டுடனான தங்கள் உறவுகளை முறித்து கொள்வதாக அறிவித்து. தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. இதனால் பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கட்டாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,…

Read More

மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மீதொட்டமுல்ல மக்கள்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் வீடுகளை இழந்தவர்கள், தமக்கு அரசாங்க வழங்கிய மதிப்பீட்டின் இழப்பு போதாது என குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 98 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. எனினும் அதிகாரிகளால் உரிய முறையில் சொத்துக்கள் மதிப்பிடப்படவில்லை என அந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read More

தொடரும் விபரீதங்கள் : சுயப்படம் எடுக்கச்சென்று மேலும் ஒரு இளைஞர் பலி

(UDHAYAM, COLOMBO) – இன்று மாலை களுத்துறை பிரதேசத்தில் புகையிரத கடவையில் சமுத்ராதேவி புகையிரதத்தில் சிற்றூர்ந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சிற்றூர்ந்தின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை , அம்பலங்கொடை – கஹவ புகையிரத நிலையத்தில் சுயப்படம் எடுக்க முற்பட்ட 26 வயது நபரொருவர் புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இதன் போது புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த அவரின் மனைவி பலபிடிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் இந்த விபத்து…

Read More

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் பற்றிய நேர்முகப் பரீட்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் காரணத்தினாலேயே பதிவுகள் பற்றிய அறிவிப்பு மேலும் தாமதமாகும் என தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 95 புதிய அரசியல் கட்சிகள் பதிவுகளுக்காக விண்ணப்பம் செய்திருந்தன எனவும், அவற்றின் பதிவுகள் பற்றிய அறிவிப்பு மே மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் முன்னர் தெரிவித்திருந்தது.

Read More

அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 92 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 77 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர். அதனுடன் களுத்துறை மாவட்டத்தில் 63 பேர் பலியாகியுள்ளனர். மேலும்…

Read More

Update – அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 103 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 112 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   Update :- Tuesday, May 30, 2017 11.10 am ———————————————————– வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நேர நிலவரப்படி, 109 பேர் காயமடைந்துள்ள அதேநேரம், மேலும் 110 பேர் காணமல்போயுள்ளதாக…

Read More