ஹம்பாந்தோட்டை மாவட்ட ‘உதா கம்மான’ வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது தொடர்பில் கருத்து வேறுபாடு

(UDHAYAM, COLOMBO) – ஹம்பாந்தோட்டை மாவட்ட ‘உதா கம்மான’ வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது தொடர்பில் மகிந்த அமரவீர மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய அமைச்சர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. அது, இன்று பிற்பகல் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதாகும்.

Read More

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தீர்மானமிக்க வேளையில் வெளியேற்றியமை ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கமைய இடம்பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க் கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மே தினத்திற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சி செலவிடும் பணம் தொடர்பில் நளின்

(UDHAYAM, COLOMBO) – மே தினத்திற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சி செலவிடும் பணம் கடந்த அரசாங்க காலப்பகுதியில் மோசடியாக சம்பாதித்தவை என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த அரசாங்க காலப்பகுதியில் மோசடியாக பெற்று கொண்ட பணத்தை தற்போது செலவு செய்கின்றனர். திருடிய பணத்தை கொண்டு தங்கு தடையின்றி அவர்களுக்கு மே தின கூட்டத்தை நடாத்த முடியும் என நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Read More

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய பொருளாதார மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடலே இடம்பெறுவதாகவும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த கலந்துரையடல்களில் எட்கா உடன்படிக்கை தொடர்பான இரு நாடுகளின் நிலைப்பாடுகள்…

Read More

முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு:பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. பண்டிகை விடுமுறையின் பின்னர் இன்றைய தினம் அந்த ஆணைக்குழு தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது. இன்றைய விசாரணைக்கு கோப் குழுவில் முன்னாள் தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட டிவ் குணசேகர அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கோப் குழுவின் தற்போதைய தலைவர் சுனில் ஹந்துன் நெத்தி மற்றும் கோப் குழு உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா ஆகியோர் நாளையும், நாளை…

Read More

குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – சகல உள்ளுராட்சி நிறுவனங்களினதும் கழிவகற்றல் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றக்கோரும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல்  நேற்று  நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17வது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். எந்தவொரு உள்ளுராட்சி நிறுவனத்தாலும் முன்னெடுக்கப்படுகின்ற அல்லது பேணப்படுகின்ற கழிவகற்றல் ,சேகரித்தல், வாகனங்களில் கொண்டு செல்லல், தற்காலிகமாக சேர்த்து வைத்தல், பதப்படுத்தல் பிரித்தல்,…

Read More

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து

(UDHAYAM, COLOMBO) – உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பிழைகளை நாடாளுமன்றத்தில் திருத்தும் வரை அந்த தேர்தல் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது

(UDHAYAM, COLOMBO) – ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவலுக்கு அமையவே இந்த 34 வயதான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இவர் இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஊடகவியலாள் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இராணுவ மேஜர்…

Read More

இலங்கையர்களின் பொறுப்பு தொடர்பில் பிரதமர்

  (UDHAYAM, COLOMBO) – நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை தேர்தெடுக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வீரக்கெட்டிய, ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாறிறிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்காக சர்வதேச நீதிமன்றமோ? சட்டமோ அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வு

  (UDHAYAM, COLOMBO) – சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி உறுதி மொழியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து, அதன் செயலாளர் மருத்துவர் நவிந்த சொய்சா இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல அரச மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More