(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது.
பண்டிகை விடுமுறையின் பின்னர் இன்றைய தினம் அந்த ஆணைக்குழு தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது.
இன்றைய விசாரணைக்கு கோப் குழுவில் முன்னாள் தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட டிவ் குணசேகர அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கோப் குழுவின் தற்போதைய தலைவர் சுனில் ஹந்துன் நெத்தி மற்றும் கோப் குழு உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா ஆகியோர் நாளையும், நாளை மறுதினமும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.