நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்றுவந்த வர்த்தகர் மடக்கி பிடிப்பு : அபராதம் விதிக்கப்பட்டதோடு போலி நெய்யை அழிக்குமாறும் நீதவான் உத்தரவு!

(UTV|COLOMBO) நெய் என்று கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால்  மடக்கி பிடிக்கப்பட்டு வத்தளை  நீதி மன்றத்தினால் இன்று (08) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் அதிகார சபை சட்டத்திற்கு அமைவாக 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர் களஞ்சியப்படுத்தி…

Read More

ரயில் குறுக்கு வீதியில் பயணித்த 8 பேருக்கு அபராதம்

(UDHAYAM, COLOMBO) – கனேமுல்ல – புளுகஹகொட ரயில் குறுக்கு வீதிக்கு ஊடாக, சமிக்ஞையை பொருட்படுத்தாது பயணித்த சிலருக்கு, கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர, இன்று அபராதம் விதித்தார். உந்துருளி செலுத்திய 8 பேருக்கு இதன்போது, 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கனேமுல்ல, ஜா-எல மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.

Read More

நடிகை மேனகா மதுவந்திக்கு அபராதம் – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – 2016 ஆம் அண்டு ஜனவரி மாதம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்றை செலுத்திய போது, சுக்கானை கைவிட்டு நடனமாடிய மேனகா மதுவாந்தி என்ற நடிகைக்கு, நீதிமன்றம் இன்று 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பண்டாரகமை காவற்துறையால் பண்டாரகமை சுற்றுலா நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடிகை கஹாத்துடுவ மற்றும் பண்டாரகமைக்கும் இடையே இவ்வாறு சுக்கானை கைவிட்டு நடனமாடிய விதம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தளத்தில்…

Read More

போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய 1900 சாரதிகளுக்கு எதிராக அபராதம்

(UDHAYAM, COLOMBO) – போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்து 990 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணச்சீட்டுக்கு மேலதிகமாக போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான ஆலோசனை வகுப்புக்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் கொழும்பு நகர் மற்றும் கொழும்பு நகருக்கு நுழையும் முதன்மை வீதிகளில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Read More