நடிகை மேனகா மதுவந்திக்கு அபராதம் – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – 2016 ஆம் அண்டு ஜனவரி மாதம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்றை செலுத்திய போது, சுக்கானை கைவிட்டு நடனமாடிய மேனகா மதுவாந்தி என்ற நடிகைக்கு, நீதிமன்றம் இன்று 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பண்டாரகமை காவற்துறையால் பண்டாரகமை சுற்றுலா நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடிகை கஹாத்துடுவ மற்றும் பண்டாரகமைக்கும் இடையே இவ்வாறு சுக்கானை கைவிட்டு நடனமாடிய விதம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த நபரொருவர், “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” திட்டத்தில் இணையத்தளம் ஊடாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி பண்டாரகமை – கெலனிகம காவல் மனை இது தொடர்பில் விசாரணை செய்து, மேனகா மதுவந்தியை பண்டாரகம காவற்துறையில் ஒப்படைத்துள்ள நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் சுக்கானை கைவிட்டு நடனமாடிய காணொளி கீழே..

[ot-video][/ot-video]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *