மரக்கறி , பழங்கள் உற்பத்தி திட்டத்திற்கு சீன அரசாங்கம் உதவி
(UTV|COLOMBO)-மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செயற்திட்ட பணிகளுக்கான தொழிநுட்ப உதவிகளை வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. சீன அரசாங்கத்தின் தெற்கு ஒத்துழைப்பு அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. செயற்திறன் மிக்க விவசாய உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பழ உற்பத்தி பூங்காக்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், அரச தனியார் பங்களிப்பு முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. …