காலம் கடந்த சிகிச்சையே டெங்கு உயிரிழப்பு அதிகரிக்க காரணம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் காலங்கடந்த சிகிச்சையே ஆகும். இதற்கான வைரஸ் உடலுக்குள் உட்சென்று பல நாட்கள் சென்ற பின்னர் உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமையினாலேயே டெங்கு நோயின் காரணமாக அதிகளவில் உயிரிழப்பு இடம்பெறுகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். சர்வதேச சனத்தொகை நாளினை முன்னிட்டு சுகாதார கல்வி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். டெங்கு…

Read More

விக்கியின் வெளிநடப்புக்கு காரணம் இதுதான்!!

(UDHAYAM, COLOMBO) – முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான காணி வழங்கலின் போது, யுத்தப் பாதிப்புக்கு உள்ளான தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நேற்றையதினம் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி வழங்கலின் போது ஒரு சமுகத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், புதிதாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கத்தின் துணையுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து, வடமாகாண சபை உறுப்பினர்களும், தமிழ் சமுகப் பிரதிநிதிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதன்போது…

Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் பிற்போடப்பட்டமைக்கான காரணம்

(UDHAYAM, COLOMBO) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மேற்கொள்ளவிருந்த போராட்டம் ஒருவார காலத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது. அதன் செயலாளர் ஹரித அலுத்கே இதனை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரியப்படுத்தினார். அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவுடன் இடம்பெற்று பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது டெங்கு நோய் பரவி வருகின்ற சூழ்நிலையில், மதத்தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இலங்கை, இந்தியாவுக்கும் இடையில் நிலவும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு காரணம் இதுவா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய கடல்சார் உடன்படிக்கைகளில் கடற்றொழில் ஒத்துழைப்பு தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்தப்படாமையே தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. த மொர்டன் டிப்ளமெசி என்ற இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் நிலவும் கடற்றொழிலாளர்  பிரச்சினை, இரண்டு நாடுகளின் ராஜதந்திர உறவுகளை பாதிப்பது மட்டும் இல்லாமல், 5 லட்சத்துக்கும் அதிகமான இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுதிக்…

Read More

தோனியின் ஆலோசனையே வெற்றிக்கு காரணம்..! தோனியை பாராட்டிய கோஹ்லி

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றமைக்கு காரணமாக அமைந்த முக்கிய தீர்மானம், முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ்.தோனியினால் மேற்கொள்ளப்பட்டது என்று இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். போட்டியின் ஆரம்பத்தில் பங்களாதேஸ் அணி பலமாக இருந்தது. இதன்போது சுழற்பந்து வீச்சாளர் கேதார் ஜாதவ் அழைக்கப்பட்டார். இந்த தீர்மானத்தை தாமும், தோனியும் இணைந்தே மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கேதார்…

Read More

கட்டாருக்கும் – வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம்

(UDHAYAM, COLOMBO) – கட்டாருக்கும் – வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம் என்ற வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். கட்டார் அரசாங்கம் முஸ்லிம் கடும்போக்கு வாதத்துக்கு நிதியுதவி வழங்கி வருவதாக குற்றம் சுமத்துகின்ற ஆறு நாடுகள், அந்த நாட்டுடனான தொடர்புகளை முறித்துக் கொண்டன. இது தொடர்பில் கட்டார் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் தாங்கள் முஸ்லிம் கடும்போக்காளர்களை ஆதரிப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் கட்டார்…

Read More

இயற்கை தொடர்பான ஆழமான உணர்வின்மையே அனர்த்தத்திற்கு காரணம் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு விசேட பொறுப்பு காணப்படுவதுடன், அதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைக் கருத்திற் கொள்ளாமலும், இயற்கை தொடர்பான ஆழமான உணர்வின்றி வாழ்வதன் மூலமுமான மோசமான நேரடி விளைவுகளை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உயிர்ப் பல்வகைமையின் தாயகமாகக் காணப்பட்ட எமது நாடு அந்தப் பல்வகைமையின் செழுமை, பெறுமதி…

Read More

15 வயது கொழும்பு பாடசாலை மாணவி தற்கொலையின் காரணம் வெளியானது…

(UDHAYAM, COLOMBO) – கடந்த வாரம் கொழும்பு பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நீதிமன்ற சாட்சி விசாரணையின் போதே நேற்று இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவியின் தாய் எச்சரித்த காரணத்தினாலேயே அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு 05, விஜய குமாரதுங்க மாவத்தையை சேர்ந்த தொன் சீமன் படபெதி சசின்தனா என்ற 15 வயதுடைய மாணவியே இவ்வாறு தற்கொலை…

Read More