சட்டமூல பிரேரணை விலக்கிக்கொள்ளப்படவில்லை – சபை முதல்வர் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – பலவந்தமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒப்பந்தம் குறித்த சட்டமூல பிரேரணை விலக்கி கொள்ளப்படவில்லை. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயத்தை தெரிவித்தார். இந்த சட்டமூலம் தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதாக இன்று வெளியான தேசிய பத்திரிக்கையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொhட்ர்பாகவே அமைச்சர் சுட்டிக்காட்னார். இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் சபை ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read More

வட மாகாண சபை பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்புடன் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படா நிலையில், பல்வேறு தரப்புடனான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் நேற்று இரவு 10.00 மணி வரையில் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் பலர் பங்குகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அந்த பேச்சு வார்த்தையில் இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படாத நிலையில்….

Read More

தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை – ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  கிடையிலான சந்திப்பு நேற்று  பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வண. பேராசிரியர் கொடபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர், வண. பேராசிரியர் கல்லேல்லே, சுமனசிறி தேரர், வண. கலாநிதி அக்குருடியே நந்த தேரர் உள்ளிட்ட தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். பௌத்த புத்திஜீவிகள் சபை செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது விரிவாகக்…

Read More

உதவி ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள். ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். – மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்

(UDHAYAM, COLOMBO) –     ஆசிரியர் உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவை உடனடியாக பத்தாயிரமாக அதிகரிக்காவிட்டால் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் உதவி ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்து கொடுப்பதாக கல்வி அமைச்சு அறிவித்தது. அது புதுவருட சம்பளத்தை வழங்கி முடித்த அடுத்த தினம் இவ் அறிவிப்பு வெளியானது. கல்வி…

Read More

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால், நாளைய தினம் இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. தமக்கு தொழில் வழங்க வேண்டும் எனற கோரிக்கையை முன்வைத்து  வடக்கு, கிழக்கிலுள்ள பட்டதாரிகள் கடந்த பல வாரங்களாக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரச சேவையிலும், வடக்கு, கிழக்கு மாகாண…

Read More

சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி

(UDHAYAM, COLOMBO) – பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டமானது குற்றச்சாட்டுக்கள் இன்றி எவரையும் தடுத்து வைக்க காவல்துறைக்கு அதிகாரங்களை கொடுக்கும் என மன்னிப்புசபையின் தென்னாசிய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் போர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாகவே பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இந்த நிலையில் மீளமைப்புகளை மேற்கொண்டு மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை…

Read More

வட கொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் வட கொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியா ஜனாதிபதி, அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் தொடர்ந்து பரிசோதித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு ஏவுகணைகள் வடகொரியாவினால் பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பாயும் திறன் கொண்ட குறித்த…

Read More

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை ஜுன் மாதம் 30ம் திகதி வரையில் தொடரும் பட்சத்தில், 51 பில்லியன் ரூபாய் மேலதிக செலவினை மின்சார சபை தாங்கிக் கொள்ள நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More