இஸ்ரேல்- பலஸ்தீன் போரால் கச்சா எண்ணெயின் விலை உயர்வு
(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் விலை 90.44 டொலர்களாக காணப்படுகின்றது. இவ்விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தாக்கத்தை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்…