சகிப் அல் ஹசன் உடன் மோதுண்ட சுரங்க லக்மால்!! விளையாட்டரங்கில் நடந்த சம்பவம் இது தான்

(UDHAYAM, COLOMBO)  – இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 338 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. தினேஸ் சந்திமால் 138 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இப் போட்டியில், சுரங்க லக்மாலும், பங்களாதேஸ் அணி வீரர் சகிப் அல் ஹசனுக்கும் இடையில் மோதல் நிலைமை ஒன்று உருவாகியமை குறிப்பிடத்தக்கது.

Read More

நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். நீதித்துறைக்கான நியமனங்களை வழங்கும் போது தாம் தனித்து தீர்மானங்களை மேற்கொள்வதில்லை. அனைத்து தரப்புடனும் கலந்துரையாடியப் பின்னரே அது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும். நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

Read More