காலநிலையில் பாரிய மாற்றம்

(UTV|COLOMBO)-இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாத்தறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காங்கேசன் துறையிலிருந்து புத்தளம் வழியாக, கொழும்பு வரையிலும், காலியிலிருந்து மாத்தறை வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால நிலை…

Read More

பாரிய யுத்தக் கப்பலொன்றை வாங்க தயாராகும் கடற்படை!

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரிய யுத்தக் கப்பலொன்றை இலங்கை கடற்படை கொள்வனவு செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் , குறித்த யுத்தக்கப்பலின் கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி கோவாவில் இடம்பெறவுள்ள வைபவத்தின் பின்னர் இந்த யுத்தக்கப்பல் கடற்படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் லுதினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே எமது செய்திச்சேவைக்கு குறிப்பிட்டிருந்தார். இந்த யுத்தக்கப்பல் 10 கோடி ரூபா (இந்திய ரூபா) பெறுமதி கொண்டதாகும். மேலும், இதன் நீளம்…

Read More

ஹட்டனில் கடையடைப்பு குப்பைகளை அகற்றகோரி பாரிய ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் நரக வர்த்தக நிலையயங்கள் மூடப்பட்டு பாரிய ஆர்பாட்டமென்று இடம்பெற்றது ஹட்டன் நகர வர்த்தகளினல் முன்னெடுக்கப்பட்ட மேற்பட ஆர்பாட்டமானது ஹட்டன் மணிக்கூண்டு சந்தியில் இடம்பெற்றது நகரின் பிரதான பாதையில் எதிர்ப்பு ஊர்வலமொன்றும் இடம்பெற்றதுகடந்த நான்கு மாத காலமாக ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமொன்று இல்லாத நிலையில் நகரின் பல பகுதிகளிலும் குப்பைகள் குவீந்துக்கிடக்கின்றதுடன் துர்நாற்றம் வீசுவதாகவும்…

Read More

பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயனமோ இல்லை

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டுக்காக தரம் 7ற்கு வழங்கப்பட்டுள்ள பூகோள விஞ்ஞானப் பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயன பொருட்களோ அடங்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்திணைக்கள வெளியீட்டு பிரிவு ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.திலங்கசிங்ஹ தெரிவிக்கையில்  இந்தப் புத்தகங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்திற்கு அமைய, அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார். ஜனவரி மாதத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. …

Read More

உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் நாட்டில் பாரிய ஆயுத வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்பு சம்பவம் உக்ரைன் நாட்டின் பலக்லேய – கார்கோவ் பிராந்தியத்தில் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த ஓர் நபருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை ஜுன் மாதம் 30ம் திகதி வரையில் தொடரும் பட்சத்தில், 51 பில்லியன் ரூபாய் மேலதிக செலவினை மின்சார சபை தாங்கிக் கொள்ள நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More