இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்

(UTV|COLOMBO) இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் 44 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Read More

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் – பரீட்சைத்திணைக்களம்

(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜீத தெரிவித்துள்ளார். கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக இம்முறை விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதவற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை மத்திய நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதற்கு அனுமதியளிக்க போவதில்லை என்று பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டார். பரீட்சை மேற்பார்வையாளர்களின் வசதி கருதி, இம்முறை பரீட்சை நடைபெறும் வகுப்புகளில் 20 மாணவர்களுக்கு மாத்திரமே…

Read More

கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மெண்டிஸ் இதற்காக  நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

25 மாவட்டங்களிலும் தற்காலிக விசேட முகாம்கள்

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்படுகின்ற மக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக விசேட முகாம்கள் 25 மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பில் முழுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட உடன், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிரதேச மக்களை தங்க வைப்பதற்காக இந்த முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். அதன்படி,…

Read More

அமைச்சரவைக் குழு இன்று உமா ஓயா பிரதேசத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம்

(UDHAYAM, COLOMBO) – உமா-ஒயா செயற்றிட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று உமா ஒயா செயற்றிட்ட வளாகத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. சில வீடுகளின் கூரைகளிலிருந்து நீர் கசியும் நிலை குறித்து இந்த உபகுழு விசேட ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்கு மேலதிகமாக இந்த செயற்றிட்டத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளும். வீட்டுக்கூரை மற்றும் கால்வாய்களுக்கு ஊடாக வீடுகளுக்கு நீர் கசியும் நிலை குறித்து வீட்டு உரிமையாளர்களுடன்…

Read More

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் இரண்டு வார காலத்திற்கு பொது மக்களின் பங்களிப்புடன் விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தயாராகியுள்ளது. மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும். இதுவரை 70 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படடுள்ளனர். அவர்களில் 25 சதவீதமானோர் 19 வயதுக்கு கீழானவர்கள் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிகரிக்கக்கூடும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக சிவில் பாதுகாப்பு படையினர் நூறு பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

ஹட்டன் டிக்கோயா குப்பையை கொண்டு பசளை ( கொம்பஸ்) தயாரிக்க இடம் தெரிவு செய்யும் விசேட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்றை தெரிவு செய்வதற்கன விசேட கலந்துரையாடல் ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் 23.06.2017 நடைபெற்றது நுவரெலியா மாவட்ட உதவி செயலாளர் பீ.ஏ.சரத் பிரேமச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது நரசபைப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதக்கான இடத்தினை தெரிவு செய்வதை விட சேகரிக்கப்படும் குப்பைகளை கொம்பஸ் பசளை தயாரிப்பதக்கு பெருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும் என தீர்மாணிக்கப்பட்டது இதன் போது   ஹட்டன் …

Read More

பாதிக்கப்பட்ட களுத்துறை பிரதேசம் தொடர்பான விசேட மீளாய்வு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விஷேட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  இந்த மீளாய்வுக் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி…

Read More

வடமாகாண சபையின் விசேட அமர்வு..

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அமைச்சர்கள் மீனதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து இன்றையதினம் வடமாகாண சபையின் விசேட அமர்வில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27ம் திகதி நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. 80 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை கடந்த மாதம் 19ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கையளிக்கப்பட்ட நிலையில், இதனை கடந்த 7ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் முன்வைத்தார்….

Read More