இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது!!
(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களின் படகும் கடற்படையினரால் கைபற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கையின் பொருட்டு யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படவுள்ளனர்.