News Editor Team

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றனர். எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ட்ரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில்…

Read More

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற நகரமாக மாற்றுவதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

வரலாற்றில் பிரசித்தி பெற்ற வணிக மற்றும் பொருளாதார மையமாக அநுராதபுர நகரத்தை மீண்டும் உலகப் பிரசித்தமான நகரமாக மாறுவதற்குத் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தஞ்சாவூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் நகரங்களைப் பற்றி இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஆனால் அதன் நான்காவது நகரமாக கருதப்பட வேண்டிய அநுராதபுரத்தின் முன்னேறத்துக்கான ஏற்பாடுகள் இதுவரையில் செய்யப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அநுராதபுரம் கலாச்சாரம், கல்வி, வர்த்தகம் மற்றும் பொருளாதார பெறுமதிகளை உலகுக்கு தெரியப்படுத்தி அதன் புராதன…

Read More

வெடித்துச் சிதறிய கையடக்க தொலைபேசி – காலியில் சம்பவம்.

தனது கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு நித்திரைக்கு சென்ற நிலையில் கையடக்க தொலைபேசி வெடித்துச் சிதறிய சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட நபர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தின் போது தான் உடனடியாக செயற்ப்பட்டதால் உயிர்தப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் தயாரிக்கப்படும் கையடக்க தொலைபேசி வகைகளில் ஒன்றே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது. கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு உறங்குவது அல்லது சார்ஜில் இருந்த வண்ணம் அதனை பயன்படுத்துவது போன்ற…

Read More

ஜனாதிபதித் தேர்தல் – 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகலாம்.

ஜனாதிபதித் தேர்தல் அச்சுப்பணிகளுக்காக அதிகபட்சம் 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகுமென அரச அச்சகம் தெரிவிக்கின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், வாக்குச்சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பான பத்திரங்கள் அச்சிடப்படும் என அரச அச்சகர் கூறியுள்ளார்.

Read More

டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் விபத்து – மூன்று பேர் காயம்.

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த வாகனம் தெற்கு அதிவேக வீதியின் கலனிகம இடைமாற்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிலான் பெரேராவுக்கு காயங்கள் எதும் ஏற்படவிலை. இருப்பினும் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Read More

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு பரிசீலனைக்கு திகதி குறிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படும் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை (15) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான…

Read More

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பொன்சேகா நீக்கம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டுள்ளார். நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் தடைவிதிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனவே, கட்சித் தலைமை மீதான விமர்சனம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

அனுரவின் கூட்டங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக அவர் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட சிசிடிவி கெமரா மற்றும் இதர நவீன தன்னியக்க சிசிடிவி கெமராக்கள் பல ஆங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் நேற்று (12) காரைத்தீவு மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கூட்ட மேடைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான கெமராக்கள் பல…

Read More

இன்று முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…

Read More

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்க தலையிடுங்கள் – முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை.

கலகொட அத்தே ஞானசார தேரர் 2016ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக நான்கு வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாக ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். அல்லாஹ் தொடர்பில் தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் றிசாத் பதியுதீன், அசாத் சாலி, முஜிபர் ரஹ்மான் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்தத் தீர்மானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் பின்னர் ஞானசார தேரர் அவ்வாறான தவறை செய்யவில்லை எனவும், 5-6 வருடங்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த…

Read More