News Editor Team

ஜனாதிபதியினால் புதிய சட்டமா அதிபர் நியமனம்.

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) நியமித்துள்ளார். சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய  அவர், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பி. ரணசிங்கவின் புதல்வராவார்.

Read More

கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது.

இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது. இதனால் சமூக விரோத நடவடிக்கைகள் கூட இன்று சமூகத்தில் இடம்பெற்று வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சகல பாடசாலை மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும். மதுபானம்,…

Read More

கெஹலிய உட்பட 7 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்.

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 7 சந்தேக நபர்கள் இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து சந்தேக நபர்களை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சந்தேக நபர்களை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

தேனில் கை வைத்தவர் விரல்களை சுவைக்காமல் இருக்கமாட்டார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் மூன்று தடவைகள் உறுதிப்படுத்திய பின்னரும் அமைச்சரவை அரசியலமைப்பு திருத்தம் மேற்கொ்ளள தீர்மானித்துள்ளமை தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கிறது. தேனில் கை வைத்தவர் விரல்களை சுவைக்காமல் இருக்கமாட்டார் என்ற சிங்கள பழமொழிக்கு ஏற்பவே ஜனாதிபதியின் நடவடிக்கை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு…

Read More

வீட்டை சேதப்படுத்திய யானை – புத்தளத்தில் சம்பவம்.

புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குற்பட்ட கோம்பகஸ்வெவ கிராமத்தில் நேற்று (11) இரவு புகுந்த காட்டு யானையொன்று வீடொன்றினை சேதப்படுத்தியுள்ளன. இதன்போது, அந்த வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பி.எம்.சஞ்சீவ என்பவரின் வீட்டையே இவ்வாறு காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. பெரும் சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டின் முன் பகுதியை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அந்த வீட்டில்…

Read More

63 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்.

மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று (12) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, இன்று (12) அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பஸ்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு பஸ்களிலும் 63 பயணிகள்…

Read More

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக்கோரி மற்றுமொரு அடிப்படை உரிமை மனு.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கும் வரை அரசியலமைப்பு மீறல் என தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்றிசி உனவட்டுனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா…

Read More

தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை எப்போதும் தயாராகவே உள்ளோம்.

ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடந்தே தீரும் தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை, எப்போதும் தயாராகவே உள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான, சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் , இலங்கையானது எத்தகைய குறைபாடுகள் உள்ள போதும் 1931ஆம் ஆண்டிலிருந்து சர்வஜன…

Read More

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்.

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். விஜயத்தின்போது இன்று இடம்பெறும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர், அதனைத் தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளிலும், அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்…

Read More

இன்று முதல் ஜனாதிபதி புலமைப்பரிசில்.

க.பொ.த உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று (12) முதல் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மாணவருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் (ஜூன் 19) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன் ஏனைய 24 மாவட்டங்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்…

Read More