சஜித், மைத்திரி இணைவு ? அது பொய்யான செய்தி.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில், முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அவசியம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமான தோல்வியை எதிர்நோக்கி, வெறிபிடித்துள்ள அரசாங்கத்திற்கு சார்பான பிரசாரக் குழுக்கள் பொய்யான செய்திகளை…