நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்தி ஆகியவற்றை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம்.
கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் எவரும் எமக்கு சவாலல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (15) வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது.நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்திகளை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.
இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம்.அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் செயற்படவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம்.நாங்கள் செயற்படுகிறோம்.
அரசியலில் நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள்.ஆகவே எம்மை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைவார்கள் என்றார்.
இதன்போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்பாக ஒன்றுக்கூடி நாமல் ராஜபக்ஷவை வரவேற்றார்கள்.பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
ஆதரவாளர்கள் மத்தியில் வந்த நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறும்.சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-இராஜதுரை ஹஷான்