News Editor Team

சமையல் எரிவாயு சின்னம் ஜனாதிபதிக்கு கிடைத்த இறைவனின் ஆசிர்வாதம்

சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த  ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும். மக்களின் இதயத்தை தொடக்கூடிய இந்த சின்னம், நிச்சயமாக ரணிலை வெற்றிபெறச்செய்யும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக…

Read More

தேர்தல் காலத்தில் செய்யக்கூடாதவை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்யக்கூடாத நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (15) தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வைத்து வேட்பாளர்களுக்கு அறிவித்தது. அதன்படி,  சட்டவிரோத செயல்கள், தவறுகள், ஊழல்கள் மற்றும் உத்தரவுகளை மீறுவதற்கான தண்டனை ஜனாதிபதி தேர்தல் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது, மேலும் சில தவறுகளுக்கான தண்டனை தேர்தல் இழப்பு மற்றும் குடிமை இழப்பும் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.எல். ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார். ஒரு…

Read More

21 ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றம் கூடும்.

ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அதற்கமைய, ஆகஸ்ட் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல்  10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து ம10.30 மணி…

Read More

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரம்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14 ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

ஜனாதிபதி தலதா மாளிகைக்குச் சென்று ஆசி பெற்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை வியாழக்கிழமை (15) கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார். தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல வரவேற்றார். பின்னர் தலதா மாளிகையின் மேல்மாடிக்கு சென்ற ஜனாதிபதி, மத வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். எதிர்வரும் ஜனாதிபதித்…

Read More

ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். “இந்த ஜனாதிபதி காலத்தில், வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிட அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் சில பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் உள்ள அச்சுறுத்தல்கள்…

Read More

பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் – ரிஷாட் எம் பி

தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வு, இன்று (15) கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும…

Read More

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்.

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு 01. ரணில் விக்கிரமசிங்க 02. சரத் மனமேந்திர 03. அபூபக்கர் மொஹமட் இன்பாஸ் 04. எஸ். பி. லியனகே 05. பானி…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை இன்று (15) ஆரம்பமானது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரிவத்த பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும். இதன்படி, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ்கள்…

Read More

சஜித் – ரிஷாட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (15) கைச்சாத்திட்டுள்ளார். இது தொடர்பான உடன்படிக்கையில் கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (15) இடம்பெற்றுள்ளது.

Read More