21 ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றம் கூடும்.

ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அதற்கமைய, ஆகஸ்ட் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல்  10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து ம10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2366/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2387/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவனம் (கூட்டிணைத்தல்) தனியார் உறுப்பினர் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக பிரேரிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து  5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான இரண்டு வினாக்களுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *