மத நிகழ்ச்சியொன்றில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி- மதபோதகர் தலைமறைவு
(UTV | கொழும்பு) – உத்தரப்பிரதேச, ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் மத நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் போலே பாபா என்ற மத போதகரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்திற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கடந்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவர் கூட்டத்திற்காக ஒதுக்கிய இடம் வெறும் 300 பேருக்கு மாத்திரமே போதுமானதாக இருந்துள்ளது. கூட்டம் நிறைவடைந்தவுடன் மக்கள் கலைந்துசெல்ல முயன்றபோது கூட்ட…