மத நிகழ்ச்சியொன்றில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி- மதபோதகர் தலைமறைவு

(UTV | கொழும்பு) –

உத்தரப்பிரதேச, ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் மத நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் போலே பாபா என்ற மத போதகரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்திற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கடந்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவர் கூட்டத்திற்காக ஒதுக்கிய இடம் வெறும் 300 பேருக்கு மாத்திரமே போதுமானதாக இருந்துள்ளது.

கூட்டம் நிறைவடைந்தவுடன் மக்கள் கலைந்துசெல்ல முயன்றபோது கூட்ட நெரிசல் அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் மயக்கமடைந்து சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு குறித்த மத சொற்பொழிவை நடத்திய மதபோதகர் போலே பாபா தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *