Chief Editor

மத நிகழ்ச்சியொன்றில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி- மதபோதகர் தலைமறைவு

(UTV | கொழும்பு) – உத்தரப்பிரதேச, ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் மத நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் போலே பாபா என்ற மத போதகரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்திற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கடந்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவர் கூட்டத்திற்காக ஒதுக்கிய இடம் வெறும் 300 பேருக்கு மாத்திரமே போதுமானதாக இருந்துள்ளது. கூட்டம் நிறைவடைந்தவுடன் மக்கள் கலைந்துசெல்ல முயன்றபோது கூட்ட…

Read More

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

(UTV | கொழும்பு) –   இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii இன் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 60 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும், 1706 பட்டதாரிகளுக்கும் ஆங்கில டிப்ளோமாதாரிகள் 453 பேருக்கும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் சற்று முன்னர் நடைபெற்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?

(UTV | கொழும்பு) – போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பவற்றை நிவர்த்திக்கவே அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்களுடன் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது – நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து மக்கள் சிரமப்படும் வேளையில், ​​பிரதமர் பதவியை ஏற்காமல், பயந்து ஓடுவது நற்செய்தியா? துயர் செய்தியா? – ஜனாதிபதி போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில்…

Read More

கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்!

(UTV | கொழும்பு) – திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளதாக இலங்கையின் தேசியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் பாதுகாப்பைப் பெறுவது இதுவே முதல் தடவை என சம்பந்தப்பட்ட பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பான கஞ்சிபானி இம்ரானின் பெயர் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக பாதாள உலகத் தடுப்புப்…

Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை!

(UTV | கொழும்பு) – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது . தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட…

Read More

சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார் -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை

(UTV | கொழும்பு) – – இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக அவர் பல பணிகளை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரா. சம்பந்தனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அவரின் பணிகளை…

Read More

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு : பதற்றமான சூழ்நிலை

(UTV | கொழும்பு) –  கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிரகாரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சிறப்பு தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என…

Read More

தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தற்போதைய ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குவது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளாத சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அறிவித்துள்ளார்.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம் தீர்ப்பு

(UTV | கொழும்பு) – பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் இன்று தெரிவித்தார். அதன்படி, சட்டமூலம் பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். எனினும் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் மேலும் தெரிவித்தார். BE INFORMED WHEREVER…

Read More

சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில்: நாளை பாராளுமன்றிற்கு எடுத்துச்செல்லப்படும்!

(UTV | கொழும்பு) – இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனிக் பூதவுடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் …

Read More