தமிழகத்தின் அடுத்த முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி

(UDHAYAM, CHENNAI) – தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழுத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார். அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என…

Read More

நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். நீதித்துறைக்கான நியமனங்களை வழங்கும் போது தாம் தனித்து தீர்மானங்களை மேற்கொள்வதில்லை. அனைத்து தரப்புடனும் கலந்துரையாடியப் பின்னரே அது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும். நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

Read More

சிறை அருகே சசிகலா தரப்பு வாகனங்கள் மீது தாக்குதல்!… காவற்துறை தடியடி!

(UDHAYAM, CHENNAI) – பெங்களூரில் சசிகலா சென்ற சிற்றூர்ந்துடன் சென்ற சிற்றூர்ந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் தாக்குதில் சிற்றூந்துகளின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைவதற்காக சென்ற போது இந்தத் தாக்குதல் நடந்தது. சசிகலாவிற்கு உடைகள் கொண்டு வந்த சிற்றூந்து மீது திடீரென்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. சசிகலாவுடன் வந்த தமிழக பதிவெண் கொண்ட மேலும் 4 சிற்றூந்துகள் மீதும் ஏறிய சிலர்…

Read More

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட ஜாதிக ஹெல உறுமய

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், 300 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த கட்சியின் உள்ளூராட்சி குழுவின் தலைவர் ஜினவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

Read More

பிரதமருக்கும் அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தின் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, CANBERRA) – அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநிலத்தின் ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்குயிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுனர் லிண்டா டேசாவும் பங்கேற்கவுள்ளார்கள். இதேவேளை  டிக்கீன் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளயை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பொருளாதாரம்….

Read More

பல கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் மூவர் கைது

(UDHAYAM, COLOMBO) – சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கொக்கேன் போதைப்பொருளை இந்நாட்டிற்கு கொண்டு வந்த லிதுவேனியா நாட்டவரொருவரை காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது. இந்த போதைப்பொருளை பொறுப்பேற்க வந்த நைஜீரியா நாட்டவர்கள் இருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசில் , லிதுவேனியா , இந்தியா , நைஜீரியா மற்றும் இலங்கையை தொடர்பு படுத்தி இந்த போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில்…

Read More

சசிகலாவுக்கு பதிலாக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

(UDHAYAM, CHENNAI) – சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது.

Read More

சொத்து குவிப்பு வழக்கு:நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம்!!!

(UDHAYAM, CHENNAI) – சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம் பின்வருமாறு. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை, சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது. விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனடியாக 3 பேரும் சரணடையவும் தீர்ப்பு வழங்கியது.  

Read More

மீண்டும் எல்லை மீறிய அமலாபால்; ரசிகர்கள் கொந்தளிப்பு

(UDHAYAM, CHENNAI) – விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்பைவிட டிவிட்டரில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார். தனது கவர்ச்சி செல்ஃபிக்களையும் அவ்வப்போது அப்லோட் செய்த வண்ணம் உள்ளார். அந்தவகையில் தற்போது தனது நண்பர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அமலாபால். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி சீப்பாக பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறீர்கள் என…

Read More

மூதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

(UDHAYAM, COLOMBO) – மூதூர் வலய கல்வி பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த அல் மினா,அல் ஹிதாய,அல் ஹிலால்,அல் மினார், ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன் இன்று காலை 8.00 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலய கல்வி பணிப்பாளர் ஆசிரியர்களை அவமானப்டுத்தினார் எனக்கூறியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பாடசாலைகளில் நடக்கும் பிழைகளை தட்டிக்கேட்டதனால் தமக்கு எதிராக தன்னால் அடையாளப்படுத்தபட்டவர்களே தமக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக…

Read More