Category: உள்நாடு
ரணிலை ஆதரிக்கும் மொட்டுவின் உறுப்பினர்களுக்கு புதிய கட்சி ?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (20) கொழும்பில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக…
இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு – ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி
நாட்டை இரண்டே வருடங்களில் மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி தலை சிறந்த நாடாக முன்னேற்றவே எமது கட்சி ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்தது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார். அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று (19) மாலை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பொருளாதார பின்னடைவை கடந்த காலங்களில் சந்தித்து…
SLMC உயர்பீட அந்தஸ்திலிருந்து ஹரீஸ் எம்.பி. நீக்கம்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறியதற்கான சரியான காரணத்தை விளக்குமாறு கோரி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரால் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறித்த கடிதத்தின் படி, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட அந்தஸ்திலிருந்து ஹரீஸ் எம்.பி உடனடியாக நீக்கப்படுவதாகவும், மேலதிகமாக பிரதித் தலைவர் பதவியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னிலை விளக்கமளிப்பதற்காக அவருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவுக்கு…
மொட்டுவில் இருந்து மேலும் 17 பேர் ரணிலுக்கு அதரவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அவருடன் இணைந்து கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்…
கறைபடியாத கரங்கள் பெருமளவில் சஜித் அணியில் இருப்பதனாலேயே மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கின்றது – தலைவர் ரிஷாட்
கறைபடியாத கரங்களை அதிகமாகக்கொண்ட அணியை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமைத்துவம் ஏற்று வழிநடத்துவதாலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்றையதினம் (19) முசலி, கொண்டச்சியில் இடம்பெற்ற “ரிஷாட் பதியுதீன் வெற்றிக்கிண்ண” கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “சஜித் பிரமேதாசவுக்கு எமது கட்சியின் ஆதரவை நல்குவதாக அறிவித்த பின்னர், முதன்முதலாக…
இரத்துச் செய்யப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அச்சிட முடியாத சுமார் 300,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் விசேட அறிவிப்பு
வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களார்கள் செலவிட முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வௌியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரணிலை பூச்சியத்துக்கு இறக்கினோம் – சுஜீவ சேனசிங்க
ராஜபக்ஷ்வினருடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியையும் ஆதரவாளர்களையும் அழித்துவந்தார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமலே சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை பூச்சியத்துக்கு இறக்கினோம். செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர், மீண்டும் நாட்டை அபிவிருத்தி செய்த லலித், காமினி, ரணசிங்க பிரேமதாச யுகத்தை உருவாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். மாவனெல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்…
சிவப்புப் பிடியாணை குற்றவாளி அர்ஜுன மகேந்திரனை கைது செய்து அழைத்து வருவேன் – அநுர
தாம் ஜனாதிபதியானால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தற்போது தேடப்பட்டு வரும் சிவப்புப் பிடியாணை குற்றவாளி அர்ஜுன மகேந்திரனை மீண்டும் அழைத்து வருவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் – நாமல் ராஜபக்ஷ
செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்போம். சுய நல தேவைகளுக்காக எம்மை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திஸ்ஸமஹராம மகா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (18) வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.சர்வமத வழிபாடுகளுடன்…