ரணில் இத்துப்போன காஸ் சிலிண்டர் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

நாட்டை வீழ்ச்சியடையச்செய்த மொட்டு கட்சிக் காரர்களுடன் இணைந்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றே ரணில் விக்ரமசிங்க நினைத்தார். ஆனால் தற்போது நாமல் ராஜபக்ஷ் மொட்டு கட்சியில் போட்டியிடுவதால், அவருக்கு வெற்றிபெறுவது நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. அதனால் ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். ரணில் விக்ரமசிங்க இத்துப்போன காஸ் சிலிண்டர். அதில் காஸ் நிரப்ப முற்பட்டால்  வெடித்து சிதறிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18)…

Read More

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா ரணிலுக்கு ஆதரவு

2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாருக்கு…

Read More

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக ஆட்சியாளர்கள் தலதா மாளிகையில் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தும் அந்தக் கதிரைக்குச் சென்ற பின் அதனை மறந்து விட்டிருக்கிறார்கள். தனக்கு பட்டம் பதவிகளில் ஆசைகள் இல்லாத காரணத்தினால் தான் அதிகாரத்திற்கு வந்த உடனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்து பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்குவேன் என்று…

Read More

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வட்வரி நீக்கப்படும்.

எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மருந்துகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவுப்பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் எளிமைப்படுத்தப்பட்ட வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும்,மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மருந்துகள் மருத்துவபொருட்கள் மீதான வட் வரியை நீக்குவோம்,பாடசாலை பொருட்கள் மேலதிக வாசிப்பு புத்தகங்கள் மீதான…

Read More

குமாரி முனசிங்க சஜித்திற்கு ஆதரவு.

எமது நாட்டின் பழம்பெரும் பிரபல நடிகரும், சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவருமான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் பாரியாரான திருமதி குமாரி முனசிங்க அவர்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

Read More

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம்

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இவ்வருட ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கிய சிலிண்டர் சின்னம் தொடர்பில் முறைப்பாடு.

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்து அவருக்கு பிறிதொரு சின்னத்தை வழங்குங்கள். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எமக்கு வழங்கியுள்ள சிலிண்டர் சின்னத்தை எவ்வாறு சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க முடியும் என மக்கள் போராட்ட சிவில் அமைப்பின் பொதுச்செயலாளர்  ஜனக பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (16)  முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் குறிப்பிட்டதாவது, 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி…

Read More

தப்பியோடிய சஜித்தும், அனுரவும் மக்களின் கஷ்டங்கள் பற்றி பேசுவது வேடிக்கையானது – ஜனாதிபதி ரணில்.

“இயலும் ஸ்ரீலங்கா” தேர்தல் மேடையானது நாட்டை பிரிக்கும் இடமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்கான மேடையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். உங்களது அனுராதபுரம் சல்காது மைதானத்தில் இன்று (17) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படும் தொடர்…

Read More

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் பின்வருமாறு: ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி – 200 ரூபாய் ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 215 ரூபாய் ஒரு கிலோ வெள்ளை சீனி – 247 ரூபாய் ஒரு கிலோ பருப்பு – 278 ரூபாய் ஒரு கிலோ கடலை – 441 ரூபாய் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் – 785…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்க தீர்மானித்துள்ளார். இதன் பிரகாரம், இன்று மாத்தறை அகுரெஸ்ஸ நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மூன்றாவது பேரணியில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

Read More