ஈரான் ஜனாதிபதியின் மரணம்: இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது – ரணில்
ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இரங்கலில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல மூத்த அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மறைந்த…