ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் விபத்து: நடந்து என்ன?

இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த 3 ஹெலிகாப்டர்களில் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தரையில் மோதியதாக இரான் அரசு ஊடகம் கூறும் அந்த ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக அந்த இடத்தை அடைவதில் சிரமம் இருப்பதாகவும் இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.

கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உள்ளது.

ஹெலிகாப்டர் தரையில் மோதிய இடம், தப்ரிஸ் நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வர்செகான் நகருக்கு அருகில் உள்ளது. தப்ரிஸ் நகரம் இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

உள்ளூர் ஊடக செய்திகளின்படி, அஜர்பைஜானில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறந்து வைத்த பிறகு, தப்ரிஸ் நகரத்தை நோக்கி அதிபர் ரைசி சென்று கொண்டிருந்தார். கடும் மூடுபனி காரணமாக விமானம் தரையிறங்கியிருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கருதப்படும் பகுதியில் வெறுங்கண்ணால் மிகக் குறைந்த தொலைவையே பார்க்க முடிவதாக குறைந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார்.

என்ன நடந்தது என்பது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த சம்பவம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை. இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைந்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான தஸ்னிம் கூறுகிறது.

மற்றொரு ஹெலிகாப்டரில் ரைசி மட்டுமல்ல, இரானின் வெளியுறவு அமைச்சரும் பயணித்தார் என்று தஸ்னிம் செய்தி கூறுகிறது. விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் பனிமூட்டம் நிலவுவதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *