ஸ்ரேலிய பிரதமர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையில்?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாசுடனான மோதல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்கலாம்; என ஐந்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாசின் தலைவர்களுக்கு எதிராகவும் பிடியாணைகளை பிறப்பிப்பது குறித்தும் சர்வதேச நீதிமன்றம் ஆராய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

நீதிமன்றம் தனது நடவடிக்கையை தொடரதீர்மானித்தால் காசாபள்ளத்தாக்கிற்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்தமை ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு மிகக்கடுமையான பதில் தாக்குதலை முன்னெடுத்தமை போன்ற  குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் இஸ்ரேலிய அதிகாரிகளிற்கு எதிராக சுமத்தலாம் என ஐந்து அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை கொண்டுள்ள இஸ்ரேலிய அதிகாரிகள்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் ஹமாஸ் அமைப்பைசேர்ந்த யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்ன குற்;றச்சாட்டுகள்சுமத்தப்படலாம் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணைகளை உலகம்  இஸ்ரேலிற்கான ஒரு தார்மீக கண்டனமாக பார்க்;ககூடும்.

காசாவில் அதன் நடவடிக்கைகளிற்காக கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின்நடவடிக்கைகள் மிகவும் அளவுக்கதிகமானவை என தெரிவித்துள்ளார்.

ஹமாசிற்கு எதிராக இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கின்ற நிலையில் பிடியாணை இஸ்ரேலின்கொள்கைகள் மீது தாக்கத்தை செலுத்தலாம்.

நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்கலாம் என்பதை இஸ்ரேலிய அரசாங்கத்தின் திட்டமிடல் பிரிவிற்கு தெரிவித்துள்ளதாக  இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *