மலேசியா விமான நிலையத்தில் வாயு கசிவு

(UTV | கொழும்பு) – மலேசியாவின் பிரதான விமான நிலையத்தில் ஏற்ப்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளது. விமான பொறியியல் வசதிகள் பிரிவில் இரசாயன கசிவு ஏற்ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பிரதான சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயக்கம் மற்றும், குமட்டல் நோய் அறிகுறிகளுக்கு பயணிகள் உள்ளாகியுள்ளனர். விமான நிலையத்திலுள்ள வளி அனர்த்த பிரிவுக்கு 14 நோயாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்….

Read More

பிரித்தானிய பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் உமா குமரன் வெற்றி!

(UTV | கொழும்பு) –    2024ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழரான பெண் வேட்பாளர் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்படி, பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த பெண் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கைத்தீவின் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து போருக்கு பின்னர் பிரித்தானியாவுக்கு…

Read More

முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களுக்கு பூட்டு.

(UTV | கொழும்பு) – பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸதானில் தடைவிதிக்கப் படுகிறது. புதுவருடத்தை முன்னிட்டு ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரை (முகரம் மாதம் 6-ஆம் திகதி முதல் 11-ஆம் திகதி வரை) பஞ்சாப்…

Read More

கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ்

(UTV | கொழும்பு) – ஏடிஸ் வகை நுளம்பு மூலம் பரவும் ஜிகா வைரஸ் நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு இந்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரல் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜிகா வைரல் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தலைவலி, தோல் வெடிப்பு, காய்ச்சல், மூட்டு வலி உள்ளிட்டவை ஜிகா வைரஸ் தொற்றுப் பாதிப்பின் அறிகுறிகளாகும். மேலும் மகாராஷ்டிரா…

Read More

போலி கடவுச் சீட்டுடன் இலங்கையர் சென்னையில் கைது.

(UTV | கொழும்பு) – போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இந்தியாவின் கடவுச் சீட்டை பெற்ற இலங்கையர் ஒருவர் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் இலங்கைக்கு வருவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் கடவுச் சீட்டை காண்பித்த போது, கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் தமது குடும்பத்தாருடன் இலங்கையிலிருந்து அகதியாக தமிழகம் சென்று வசித்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியக் கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது….

Read More

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ சவூதி அரேபியாவின் முன்மாதிரியான திட்டம்

(UTV | கொழும்பு) –    2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியைஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும் இந்நாள் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. பஹ்ரைன், மொராக்கோ, கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்த முயற்சியை சவூதி அரேபியா முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது. 1990 ஆம் ஆண்டு ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிறிப்பதற்கான இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து,…

Read More

மத நிகழ்ச்சியொன்றில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி- மதபோதகர் தலைமறைவு

(UTV | கொழும்பு) – உத்தரப்பிரதேச, ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் மத நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் போலே பாபா என்ற மத போதகரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்திற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கடந்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவர் கூட்டத்திற்காக ஒதுக்கிய இடம் வெறும் 300 பேருக்கு மாத்திரமே போதுமானதாக இருந்துள்ளது. கூட்டம் நிறைவடைந்தவுடன் மக்கள் கலைந்துசெல்ல முயன்றபோது கூட்ட…

Read More

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று!!

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெற உள்ளது. அதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி  இன்றிரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 9வது ‘டி-20’ உலகக்கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகிறது. ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இன்று பார்படோஸின்…

Read More

மாலைதீவு ஜனாதிபதிக்கு சூனியம் செய்ய முயன்ற அமைச்சர் கைது!

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸிற்கு எதிராக செய்வினை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அவரது கட்சியைச் சேர்த்த அமைச்சர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலைத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் செய்வினை செய்வதற்கு முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் அவர்களின் இவ்வாறான…

Read More

பலஸ்தீன் மூதாட்டி மீது, இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரம் ..!

காசா பகுதியின் ஒரு வீட்டில், தனியாக உறங்கிக் கொண்டிருந்த, வயோதிப பாலஸ்தீனப் பெண் மீது, ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், வெறிகொண்ட நாயை பாயச்செய்ததில், பாலஸ்தீனப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார். யா அல்லாஹ், அப்பாவிகளான அந்த வயோதிப முதியவர்கள் மீது, கொடூ ரத்தை பிரயோகிக்கும், அக்கிரமக்காரர்களின் பிடியிலிருந்து விடுபட நீயே அவர்களுக்கு உதவுவாயாக  

Read More