போலி கடவுச் சீட்டுடன் இலங்கையர் சென்னையில் கைது.

(UTV | கொழும்பு) –

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இந்தியாவின் கடவுச் சீட்டை பெற்ற இலங்கையர் ஒருவர் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் இலங்கைக்கு வருவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் கடவுச் சீட்டை காண்பித்த போது, கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர் தமது குடும்பத்தாருடன் இலங்கையிலிருந்து அகதியாக தமிழகம் சென்று வசித்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியக் கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *