மலேசியா விமான நிலையத்தில் வாயு கசிவு
(UTV | கொழும்பு) – மலேசியாவின் பிரதான விமான நிலையத்தில் ஏற்ப்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளது. விமான பொறியியல் வசதிகள் பிரிவில் இரசாயன கசிவு ஏற்ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பிரதான சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயக்கம் மற்றும், குமட்டல் நோய் அறிகுறிகளுக்கு பயணிகள் உள்ளாகியுள்ளனர். விமான நிலையத்திலுள்ள வளி அனர்த்த பிரிவுக்கு 14 நோயாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்….