உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஸ்பெயின் அணியின் தலைவிக்கு நேர்ந்த சோகம்!

(UTV | கொழும்பு) – உலககிண்ண இறுதிப்போட்டியில் தனது அணிக்காக கோல் அடித்த ஸ்பெயின் அணியின் தலைவியிடம் அவரது தந்தை உயிரிழந்த தகவல் போட்டி முடிவடைந்த பின்னரே தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்து அணியை தோற்கடித்த – வெற்றிக்கு காரணமான அந்த ஒரு கோலை அணித்தலைவி ஒல்கா கார்மொனா அடித்தார். இந்த நிலையில் நோய்காரணமாக நீண்டகாலமாக போராடிக்கொண்டிருந்த அவரின் தந்தை உயிரிழந்துள்ளார். நீங்கள் அந்த இரவு என்னை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்பது எனக்கு தெரியும் நீங்கள்…

Read More

இலங்கையின் லங்கா பிறீமியர் லீக் தொடரில் – பி-லவ் கண்டி சம்பியனானது.

(UTV | கொழும்பு) – கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற தம்புள்ள ஓறாவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே கண்டி முதற் தடவையாக சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஓறாவின் அணித்தலைவர் குசல் மென்டிஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓறா, தனஞ்சய டி சில்வாவின் 40 (29), சதீர சமரவிக்கிரமவின் 36 (30), குசல் பெரேராவின் ஆட்டமிழக்காத 31 (25) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4…

Read More

பொக்சிங்யில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் சாதனை!

(UTV | கொழும்பு) –   பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் அத்துடன்  கொழும்பு 2  சிலேவ் ஜலன்ட்  பொக்சிங் கழகத்தின் அங்கத்தவராகவும்  என்.என். தனஞ்ஜய பயிற்றுவிப்பாளரின்  பயிற்சி அளிக்கப்பட்டு இரத்தினபுரியில் பாடசாலை மட்டத்தில்  கனிஷ்ட  மாணவிகளுக்கு நெவியா பொக்சிங் வெற்றிக் கிண்ணத்துக்கான  சுற்றுப் போட்டியில் முதல் சுற்றுக்கு மரியம் அனஸ்  வெற்றியீட்டினார். மரியம் அனஸ் முதலாவது முஸ்லிம் பெண் பொக்சிங் மாணவியாகவே இப்போட்டியில் கலந்து கொண்டார்.  (44-46 கிலோ எடை)  இச் சுற்றுப் போட்டி கடந்த ஆகஸ்ட்…

Read More

கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான கல்முனையைச் சேர்ந்த அஹ்னாப்!

(UTV | கொழும்பு) – சிறு வயது முதல் கிரிக்கெட்டில் அலாதி பிரியம் கொண்டு பல்துறைகளிலும் திறமையை பறக்க விட்ட, கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவனும், கல்முனை Legends கழகத்தின் சொலிட் வெபன் (Solid Weapon) என்று அழைக்கப்படும் முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார். உள்ளூரில் இவரது கிரிக்கெட் பயணம் கல்முனை லெஜெண்ட்ஸ் அணியில் தொடங்கியதுடன், Legends அணியின் பல்வேறு…

Read More

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!

(UTV | கொழும்பு) – சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார். வனிந்து தனது தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் தான் அந்த முடிவை எடுத்ததாக வனிந்து குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வனிந்து ஹசரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் போது 4 டெஸ்ட்…

Read More

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்கவுக்கு எதிரான பிணை தளர்வு!

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகள் சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தினால் இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் அவுஸ்திரேலியாவுக்குள் தடையின்றி பயணம் செய்ய முடியுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவுக்குச் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில்…

Read More

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி!

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து தமது…

Read More

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

(UTV | கொழும்பு) – கடந்த ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்க வென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட், ஸிம்பாப்வேயின் சீன் வில்லியம்சன் ஆகியோரும் இவ்விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் இருந்தனர். எனினும், இவர்களை விஞ்சி, வனிந்து ஹசரங்க இவ்விருதை வென்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.ஸிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட நிலையில் அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது. இவ்விருது கிடைத்தமையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப்…

Read More

வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம்!

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான சுப்பர் 06 தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் நடத்தை தொடர்பில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த போட்டியில் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு திரும்பும் போது வனிந்து ஹசரங்க தனது மட்டையால் எல்லைக்கு அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, இது நடத்தை விதிகளின்…

Read More

ஹிஜாப் அணிய விதித்த தடைய நீக்கியது பிரான்ஸ்!

(UTV | கொழும்பு) – பிரான்ஸில் உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டின் அதி உயர் நிர்வாக நீதிமன்றம்  இன்று உறுதிப்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் பெண்கள், மத ரீதியான ஆடைகளை அணிவதற்கு பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்மேளனம் தடை விதித்துள்ளது. இத்தடையின்படி, ஹிஜாப் மற்றும் யூதர்களின் கிப்பா தொப்பி ஆகியனவற்றையும் போட்டியாளர்கள் அணிய முடியாது. தொழில்சார் அற்ற, அமெச்சூர் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கும் இவ்விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கால்பந்தாட்டப்…

Read More