Category: சூடான செய்திகள் 1
ஜனாதிபதி தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு.
2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.20 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 717 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த வேண்டும்” – உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம் ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இன்று தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம் , விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டுமெனவும் தேர்தல் ஆணையத்தை பணித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் காத்தான்குடி முபீன் குழு ரணிலுக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு எல் எம் என் முபின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு தீர்மானம் இன்று 21/08/2024 அன்று அன்று கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்த பேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபின் தலைமையிலான குழுவினர் தமது ஆதரவை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர். வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும்…
தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் நியமனம்
தொழில் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அபிவிருத்தி திட்ட அமைச்சராக அலிஸாஹிர் மெளலானா நியமனம்.
அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அண்மையில் ரணில் தரப்புடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது
மொட்டுவின் எம்.பி எதிர்க்கட்சியில் இணைவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார். 2020 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கருணாதாச மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 114,319 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
ரணில் இத்துப்போன காஸ் சிலிண்டர் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி
நாட்டை வீழ்ச்சியடையச்செய்த மொட்டு கட்சிக் காரர்களுடன் இணைந்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றே ரணில் விக்ரமசிங்க நினைத்தார். ஆனால் தற்போது நாமல் ராஜபக்ஷ் மொட்டு கட்சியில் போட்டியிடுவதால், அவருக்கு வெற்றிபெறுவது நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. அதனால் ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். ரணில் விக்ரமசிங்க இத்துப்போன காஸ் சிலிண்டர். அதில் காஸ் நிரப்ப முற்பட்டால் வெடித்து சிதறிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18)…
சஜித்திற்கு அதிகரிக்கும் ஆதரவு
இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மற்றும் நன்மதிப்பு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல குணவர்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். மங்கள சமரவீரவின் மரணத்தின் பின்னர் அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த முதல் நபராக சஞ்சல குணவர்தனவை குறிப்பிடலாம். இவ்வாறு அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன்…
அலி சாஹிர் எம் பியிடம் விளக்கம் கோரியது முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த அலி சாஹிர் மௌலானா எம். பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , கட்சியிலிருந்து இடைநிறுத்தி, அவரிடம் விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே – வேலுகுமார் எம்.பி
“நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை” என வேலுகுமார் எம். பி. அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இம்முறை ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காகவே போட்டியிடுகின்றார். ஒரு கட்சி சார்ந்தோ, ஒரு குழுவினர் சார்ந்தோ அல்லாமல் சுயாதீன வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை. எனவே…