Category: சூடான செய்திகள் 1
தமிழ் – முஸ்லிம் மக்கள் சஜித் பக்கம் – நளின் பண்டார
ரணில் விக்கிரமசிங்கவை சிறைக்கு அனுப்பும் வரை தூங்க போவதில்லை என்று குறிப்பிட்டவர்கள் இன்று வெட்கமில்லாமல் ரணில் புகழ்பாடுகிறார்கள். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவு வழங்குவார்கள். செப்டெம்பர் 22 ஆம் திகதி அரசாங்கத்தை பொறுப்பேற்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) இடம்பெற்ற ‘அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுள்ள எவரையும் நான் பாதுகாக்கவில்லை – ஜனாதிபதி
சிலரினால் ஊழலைப் பற்றிப் பேச மட்டுமே முடியும் .ஆனால் ஊழலைத் தடுப்பதற்காக பல சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை, குற்றச் செயல்களால் சம்பாதித்த சொத்து தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழல் குற்றச்சாட்டுள்ள எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் அந்த நிலையில் இருந்து காப்பாற்றி திறமையை நிரூபித்ததன் காரணமாக தமக்கு யாருடனும் போட்டி…
விலகியவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணையுமாறு நாமல் அழைப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் திட்டம் தமக்கு இல்லையென்றாலும் சவாலான நேரத்தில் கட்சியின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிடுவதாகவும் கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ இன்று (7) தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவருக்கு பொருத்தமான ‘சூட்’ போடுவது தனது பொறுப்பாக மாறியதாகவும், ஆனால் அந்த சூட்டை கட்டாயப்படுத்த முடியாது எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த…
14 ஆம் திகதி இறுதித் தீர்மானம் – ரிஷாட் MP
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது இறுதித் தீர்மானத்தை எட்டமுடியாத நிலையில் அதன் உயர்பீடக் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானம் 14 ஆம் திகதி மீண்டும் உயர்பீடம் கூடியே எடுக்கவுள்ளதாக கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – தம்மிக்க பெரேரா
வர்த்தகர் தம்மிக பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களிற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தெரிவித்துள்ளார்.
அதிரடி அறிவிப்பு – ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாமல் ராஜபக்சவின் பெயரை அறிவிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட பின்வாங்கியுள்ளதால் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித்திற்கு ஆதரவு.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து வரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார். “தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவையும் பூரண பங்களிப்பையும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்…
நாமல் ராஜபக்ஷ விலகினார் – சபாநாயகர் அறிவித்தார்.
சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விலகியுள்ளார். பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (06) கூடிய போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் சபைக்கு இவ்வாறு அறிவித்தார். குழுவின் தலைவர் பதவியில் இருந்து நாமல் ராஜபக்ஷ விலகியுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார.
தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (06) காலை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது கட்சியின் சட்டத்தரணிகளுடன் சென்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் – மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்திற்கு ஆதரவு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இன்று ஹட்டனில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டை தமது அரசியல் உயர்பீடகூட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னதாக எட்டியிருந்தது.