ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது இறுதித் தீர்மானத்தை எட்டமுடியாத நிலையில் அதன் உயர்பீடக் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் 14 ஆம் திகதி மீண்டும் உயர்பீடம் கூடியே எடுக்கவுள்ளதாக கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.