சரத் பொன்சேகா இராஜினாமா செய்தார்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராஜினாமா செய்துள்ளார்.

Read More

மனுஷ, ஹரின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது சட்டரீதியாக செல்லுபடியாகும் – உயர் நீதிமன்றம்.

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் பாராளுமன்ற ஆசனங்களையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.

Read More

மீண்டும் வரிசைகளில் நிற்கும் நிலைக்கே செல்வோம் – ஜனாதிபதி ரணில்

வீதியில் இறங்கி கோசங்களை எழுப்புவதன் மூலம் மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கம் தொடர்பில் கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் உள்ள கூட்டுறவு சங்க வலையமைப்பின் தலைவர்கள்,  அதிகாரிகள் உட்பட பெருந்தொகையான பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ”IMF மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின் காரணமாக நாங்கள் இப்போது…

Read More

ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித்தோ அல்லது நாமலோ சவாலானவர்கள் அல்ல

மொட்டுவவிற்கு வாக்களித்த கிராமத்தில் உள்ள பலர் இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்றார்கள். அதனாலேயே மொட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியைச் சுற்றிக் குவிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித்தோ அல்லது நாமலோ சவாலானவர்கள் அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் பிரதித் தலைவர் கூறினார். “ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று…

Read More

அர்ஜுன ரணதுங்கவும் சஜித்துக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

Read More

தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு ந.ஶ்ரீகாந்தாவால் வெளியிடப்பட்டது. ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது. சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது…

Read More

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

Read More

எனது அனுபவத்தின் படி கூறுகின்றேன் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் – மஹிந்த

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட்டுப் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில்  ஒன்றிணையுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (07) புதன்கிழமை காலை இடம்பெற்ற “ 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பில்” ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்…

Read More

கட்டுப்பணம் செலுத்தியோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப்பாணம் செலுத்தும் காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டுமென வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித…

Read More

திடீரென வெளியான அதிவிசேட வர்த்தமானி.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ராஜபக்ஷ அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தமையே இதற்குக் காரணமாகும்.

Read More