Category: சூடான செய்திகள் 1
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர
தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் சர்வஜன அதிகார மாநாட்டில் வைத்தே இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவால் திலித் ஜயவீர, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு நிபந்தனையுடனான ஆதரவு இன்று (04) கௌரவத் தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிடுகின்ற எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவதென கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மொட்டு உறுப்பினர்கள் அடைக்கலம் தேடியே ரணிலோடு இணைகின்றனர்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். VFS கொடுக்கல் வாங்கள்…
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு
சர்வஜன அதிகாரம் கட்சி ஏற்பாடு செய்துள்ள சர்வஜன மாநாடு இன்று (04) பிற்பகல் 3.00 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. அந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் இதன்போது அறிவிக்கப்படவுள்ளார். இந்த மாநாடு இன்று பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதுடன், வளாகத்தின் ஏற்பாடுகளை இன்று நண்பகல் ஜயந்த சமரவீர பார்வையிட்டார்.
நாமல் செய்த தவறால் எமது வீடுகள் தீக்கிரையாகின – சந்திரசேன MP
நாமல் ராஜபக்ஷ உட்பட ஒரு தரப்பினர் 2022 மே 09ஆம் திகதி செய்த தவறால் எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவர்கள் தவறு செய்ய நாங்கள் தண்டனை அனுபவித்தோம். இவ்வாறானவர்களுடன் அரசியல் செய்வதை விட தற்போது எடுத்துள்ள தீர்மானம் சிறந்ததாக உள்ளது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அனுராதபுரம் மாவட்ட மக்களின் அபிலாஷைக்கு அமைவாகவே ஜனாதிபதி…
பொதுஜன பெரமுன அதிரடி – நால்வர் நீக்கம் – நாமலுக்கு புதிய பொறுப்பு.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம் சந்திரசேன, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பதிரண ஆகியோர் மாவட்ட தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இதேவேளை, அநுராதபுரம் மாவட்ட தலைவராக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, மாத்தறை மாவட்ட தலைவராக நிபுண ரணவக்க, காலி மாவட்ட தலைவராக மொஹான் டி சில்வா…
ரோஹித அபேகுணவர்தன ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு.
களுத்துறை மாவட்ட மக்கள், கட்சி முக்கியஸர்தர்கள் மற்றும் அனைத்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்டு வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…
ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு – தயாசிறி MP அறிவிப்பு.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான திலங்க சுமதிபால மற்றும் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, புதிய குழுவொன்றுக்கு நாட்டைக் கையளிக்க…
சஜித்தை சந்தித்ததாகக் கூறப்படுவது பொய் – நாமல்
எக்காரணம் கொண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தான் சந்திக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தெரிவித்துள்ளார். அது பொய்யானது என தேசிய அமைப்பாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.