ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு நிபந்தனையுடனான ஆதரவு
இன்று (04) கௌரவத் தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிடுகின்ற எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவதென கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.