Category: சூடான செய்திகள் 1
நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.
தாம் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 07 குற்றப்பத்திரிகைகளை வாசித்த பின்னரே டயானா கமகே இதனைத் தெரிவித்தார்.
மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த தினேஸ் தீவிர முயற்சி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இரண்டு தலைவர்களிற்கும் நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. தனது பாடசாலைத்தோழனான ஜனாதிபதியுடனும் முன்னாள் ஜனாதிபதியுடனும் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள தினேஸ் குணவர்த்தன, தேர்தலில் ஜனாதிபதிக்கான பொதுத்தளத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் பொதுஜனபெரமுனவின் சார்பில் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என பசில்ராஜபக்ச…
கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த நீதியமைச்சர் பதவியையும் அவர் அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டு வேட்பாளர்கள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று பத்திரப்பதிவு செய்த வேட்பாளர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் ஆறு (06) வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம் – ஜனாதிபதிக்கு அதிகரிக்கும் ஆதரவு.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை தவிர வேறு எவராகினும் கட்சியை விட்டு வெளியேறினாலும் அவர்களால் வாக்குகளை பெற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (31) தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்றும், அந்தக் குழுவில் சிலர் இன்னமும் எம்முடன் செயற்பட்டு வருவதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
116 பேரடங்கிய குழு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேரடங்கிய குழு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானம். பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09 மாகாண அரசாங்கங்கள் உள்ளடங்களாக 10 அரசாங்கங்களின் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்றுவதாக உறுதியளித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன…
ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.
சுயாதீன வேட்பாளர் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதி மற்றும் சொத்துக்களை தவறான வகையில் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார். தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்படும் ஏனைய வேட்பாளர்களுக்கு இதனால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு புதிய சுதந்திர முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. புதிய சுதந்திர முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ள முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள…
பொதுஜன பெரமுனவின் அதிரடி தீர்மானம் – ஆட்டம் காணும் அரசியல்
கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்சியின் பதவி நிலைகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (31) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார். “பொலிஸ் மா அதிபரை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதற்கு அதிகாரம் உள்ள ஜனாதிபதியிடம் கோரவே…