Category: சூடான செய்திகள் 1
ரணிலின் ரூட் க்ளியர் என்று சொல்கிறார் கம்மன்பில
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிராகரித்தமையானது, ரணிலுக்கான பல தரப்புகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு இருந்த அத்தனை தடைகளையும் நீக்கிவிட்டிருப்பதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் தீர்மானித்துள்ளதாகவும் தனக்கு ஆதரவை பெற்றுத்தருமாறும் கோரி ரணில் விக்கிரமசிங்கவினால், நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை நிராகரித்து பொதுஜன பெரமுனவின்…
கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெயரிடப்பட்டுள்ளார். இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
சூடுபிடிக்கும் அரசியல் – மஹிந்தவை சந்தித்த தம்மிக்க.
விஜேராம பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் சந்திப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிந்த தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் – பெரமுனவின் MP க்கள் எச்சரிக்கை.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவளித்துள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜபக்ச தனது நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளவேண்டும் ரணிலை ஆதரிக்கவேண்டும் அல்லது அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Breaking – ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பி க்களின் எண்ணிக்கை ?
பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!
பொலிஸ் மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து பணியாற்றுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…
தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு மொட்டு கட்சி எம்பி சந்திரசேன
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பந்துல
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதி உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை கோட்டாபய ராஜபக்ஷ பார்த்துக் கொண்டிருப்பார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகித்துக் கொள்ளமாட்டார் என்றும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார். கடுமையான தீர்மானங்களை எடுக்காவிடின் இவர்களை கட்டுப்படுத்த முடியாதெனவும் மக்களை பணயக் கைதிகளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு அடிப்பணிய முடியாதெனவும் போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தம்
(UTV செய்தியாளர்) ஹிஜாப் அணிந்து வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு பாதிக்கப்பட்ட அதிபர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த விசாரணைகள் இடம்பெற்ற போதும், மனித உரிமைகள் ஆணைக் குழு முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பரீட்சை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளுக்கு சமூகமளித்திருக்கவில்லை. இதனையடுத்து இந்த விசாரணைகள் எதிர்வரும் 19…