வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உயர்வு

(UTV|AMERICA) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் வீடொன்றின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

விமானம் விபத்துக்குள்ளான போது, விமானத்தில் விமானி மாத்திரம் இருந்துள்ளார்.

எனினும் விமானம் வீடொன்றில் மோதி வெடித்ததில், விமானியுடன் சேர்த்து குறித்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *