கரப்பான்பூச்சிகள் வாழ தன் காதையே கொடுத்த இளைஞன்?

தென் சீனாவின் உள்ள குவாங்டாங் மாகாணத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற டான்குவான் நகரைச் சேர்ந்தவர் தான் லீ(19).

இவரது காதுக்குள் இருந்து 26 கரப்பான் பூச்சிகள் வரும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருந்திருக்க மாட்டார்.

இரவு முழுக்க நடந்து கொண்டே இருந்த லீ காலையில் விடிந்ததும் முதல் வேளையாக காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு லீயின் காதை பரிசோதித்துப் பார்த்த மருத்துவருக்குப் பேரதிர்ச்சி. லீயின் காதுகளுக்குள் ஒரு பெரிய கரப்பான்பூச்சியும் அதன் 25 குட்டிகளும் சேர்ந்து கூடுகட்டி குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன.

இதைக்கேட்டதும் லீ பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். இதுவரையிலும் இப்படி ஒரு விஷயம் நம் காதுகளுக்குள் நடந்துகொண்டிருப்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவே இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

தன் காதுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், சாதாரணமாக எல்லா நாட்களையும் கடந்து போகிற லீ ஒரு நாள் இரவு தன்னுடைய வீட்டில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நடு இரவில் அவருக்கு தூக்கம் வரவில்லை. எழுந்து சிறிது நேரம் வீட்டுக்குள்ளுயே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். திரும்பவும் சென்று படுக்க முயற்சி செய்தால், தூக்கம் வரவில்லை. அப்படி வழக்கத்துக்கு மாறாக அவருக்கு எனன்தான் ஆயிற்று. வேறு ஒன்றுமில்லை, திடீர் காதுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். எப்படியும் இப்போது ஒன்றுமே செய்ய இயலாது. காலையில் தான் மருத்துவரை சந்திக்க முடியும்.

சில வாரங்களுக்கு முன்பே அந்த பெண் கரப்பான்பூச்சி லீயின் காதுக்குள் சென்று முட்டை பொறித்திருக்க வேண்டும் என்பதை சொன்ன போது லீ மயங்கி விழாத குறை தான். ஆனால் கரப்பான் பூச்சிகள் அதிகபட்சமாக 40 முட்டைகளிட்டு குஞ்சு பொறிக்க கூடியவை, அந்த குஞ்சுகள் வளர சுமார் 3 முதல் 4 மாதங்கள் கூட ஆகலாம்.

சாங்ஸ் சோபியன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் யாங் சிங் லீ யின் காதில் ஏதோ பூச்சியை போன்ற ஒரு உருவம் அடைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவர் காதை ஆராய்ந்த போது தான் அதில் ஒரு பெரிய பெண் கரப்பான் பூச்சி சுமார் 0.3 அங்குல நீளத்தில் குடியிருப்பதை கவனித்தார். அதோடு அவர் தேடல் முடியவில்லை, மேலும் காதில் தீவிரமாக தேடிய போது 25 குட்டி கரப்பான் பூச்சிகளும் உள்ளே இருப்பதை கண்டுபிடித்தார்.

நல்லவேளை லீ அதற்கு முன்பாகவே காது வலி புண்ணியத்தில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்து விட்டதால் கரப்பான் பூச்சியை காட்டிக் கொடுத்து தன் காதை காப்பாற்றிக் கொண்டார். ஆனாலும் நம்மூரில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் கரப்பான்பூச்சிக்கு காது கொடுத்த சீனாவின் லீயும் இப்போது அங்கே பிரபலம் தான்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *