அமைச்சர் ரவியினால், பந்துலவுக்கு சவால்

(UTV|COLOMBO) கெரவலபிட்டிய, திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் நிலையம் தொடர்பில் ஏதாவது தேவைகள் இருப்பின் தனது அமைச்சிற்கு வருகை தந்து ஆராய்ந்து பார்க்குமாறு தான் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவுக்கு சவால் விடுப்பதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“எமது பந்துல குணவர்த்தன எம்பிக்கு தெரிவிக்கிறேன்.. அன்று 2500 ரூபாவிற்கு சாப்பிட முடியும் என்பது போல் மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல வேண்டாம். நான் வாய்ப்பு வழங்கியுள்ளோம் எவருக்கும் வந்து பார்வையிடலாம்.. வெளிப்படையாக, நாட்டுக்கு நட்டம் ஏற்படாத விதத்தில் அனைத்தும் சிறந்த சிரேஷ்ட வல்லுனர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த மின் நிலையம் தொடர்பில், ஊடகங்கள் தெரியாமல் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். சட்ட ரீதியில் பிரச்சினைகள் இல்லை என்றால் பிரச்சினை என்னதான் என எனக்கு புரியவில்லை.. “

“நான் இது தொடர்பில் ஊடகங்களுக்கு சவால் விடுக்கிறேன்.. அவர்களுக்கு மூன்று நாட்கள் வழங்குகிறேன் அமைச்சிற்கு வருகை தந்து உண்மை என்னவென்று ஆராயுங்கள்.. இல்லையென்றால் தமது ஊடகத்தினால் பொய்யான பிரச்சாரம் / செய்தி வெளியிடப்பட்டதாக மக்களுக்கு கூறுங்கள்..”என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *